ஒருவர் தன் வாழ்வில், தன் குடும்ப உறவுகளுக்குச் செய்யும் கொடுமைகள்தான் பித்ரு சாபம், புத்திர சாபம், பெண் சாபம், சகோதர சாபம், பாமர சாபம் போன்றவை ஏற்படக் காரணம். ஒவ்வொரு சாபமும் அதனதன் செயல்நிலைக்குத் தகுந்தபடி 18 விதமாகச் செயல்பட்டு, 18 விதமான பலன்களைத் தந்து சிரமமடையச் செய்துவிடும்.
மாமியார் மருமகளுக்குச் செய்யும் கொடுமை, மருமகள் மாமியாருக்குச் செய்யும் தீமை, கணவனின் சகோதரிகள் தன் வீட்டிற்கு வாழவந்த பெண்களுக்குச் செய்யும் கொடுமை, வாழவந்த பெண் தன் கணவனின் உடன்பிறந் தவர்களுக்குச் செய்யும் தீமை, இரண்டு மனைவிகளில் ஒருத்தியை கவனியாமல் ஒதுக்கி வைத்து சிரமப்படச் செய்த பாவம், தாயைத் தவிக்கவிட்டு தாரத்துடன் ஓடிய பாவம்- குடும்பத்தில் இதுபோன்று பெண்களுக்கு பெண்களே செய்யும் கொடு மைகள், வாழவந்த பெண்களுக்கு கொடுமைகள் செய்ததால். அப்பெண்கள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போவது போன்ற ஒவ்வொரு நிகழ்வும், அந்த வம்சத்தில் பிறந்த பெண்களுக்கும் வாழவந்த பெண்களுக்கும் ஒவ்வொரு விதமாக சிரமப் பலன்களைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெண் சாபமுள்ள குடும்பத்தில் திருமணத் தடை, கர்ப்பச் சிதைவு, மனநோய், பெண்கள் துர்மரணம், ஆபிசார தோஷம், கணவன்- மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு, விவாக ரத்து, தாம்பத்திய சுகக்குறைவு, இளம்வயதில் கணவனை இழத்தல், பெண்களால் அவமானம், மூத்த சகோதரன் மறைவு, ஆண் குழந்தை இறப்பு, வாழாவெட்டி நிலை, தாய்ப்பாசம் குறைவு, பகை போன்று பலவிதமான முறையில் சிரமம் தரும்.
பெண் சாபம் வம்சத்தில் எப்போது- எப்படி- யாரால் உருவானது என்பதை அறிந்து, அதற்குத் தகுந்த சாபநிவர்த்தி முறையைச் செய்தால்தான் சாபம் நிவர்த்தியாகும். பொதுவான பூஜை, பரிகாரம் போன்ற செயல்களால் நிவர்த்தியாகாது என்பதே ஜீவநாடியில் அகத்தியர் வாக்கு.
பதினைந்து வருடமாக ஜீவநாடியில் என்னிடம் பலன் கேட்க வந்தவர்களுக்கு, அகத்தியர் நாடியில் ஒளிரூபமாக எழுத்தில் கூறிய பாவ- சாபப் பலன்களை அறிந்து, அவர் களின் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்களை உதாரணமாகக்கொண்டு ஒப்பிட்டு, ஏராள மான ஜாதங்களை ஆய்வுசெய்து அறிந்தவற் றையே வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். எந்தவொரு கிரகமும் மனித வாழ்வில் ஈடுபட்டு நன்மை, தீமைகளைச் செய்வ தில்லை. அவரவரின் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளே இப்பிறவி வாழ்வில் தடைகளுக்குக் காரணம் என்பதே உண்மை.
இன்றைய நாளில் நிறைய இளைஞர்கள் ஜோதிடம் கற்று, பலன் கூறிவருகிறார்கள். இவர்கள் சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிடத்தைப் புரிந்து, தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் நடந்தது, நடப்பது, எதிர்கால வாழ்வில் நடக் கப்போவது என அனைத்திலும் உண்மை யான பலன்களைத் துல்லியமாகக் கூறலாம்; கூறமுடியும். இனி, முற்பிறவிக் கணவனையே இப்பிறவி யிலும் அடையும் பெண்ணின் ஜாதக அமைப்பைக் காண்போம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் அவளது இப்பிறவிக் கணவனைக் குறிக்கும் உதாரண கிரகம் செவ்வாய் ஆகும். சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகியைக் குறிக்கும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உதாரண ஜாதகத்தில் ஜாதகியைக் குறிப்பிடும் சுக்கிரனுக்கு 12-ஆவது ராசியில் இப்பிறவிக் கணவனைக் குறிக்கும் செவ்வாய் உள்ளது. மேஷம்முதல் மீனம்வரையுள்ள 12 ராசிகளில் எந்த இடத்திலும் இதுபோன்று செவ்வாய்க்கு 2-ஆவது ராசியில் சுக்கிரனும், அந்த சுக்கிரனுக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும் இருந்தால், அந்தப் பெண் தன் முற்பிறவியில் எவர் கணவராக இருந்தாரோ, அவரையே இப்பிறவியிலும் கணவராக மணம் முடித்து வாழ்வாள் என்பது ஜீவநாடியில் அகத்தியர் வாக்காகும்.
இதுபோன்ற அமைப்பில் பிறந்த பெண் களை, முற்பிறவிக் கணவன் தேடிவந்து மணம்புரிவான். கணவன் இவள்மீது அதிக பாசம் கொண்டிருப்பான். தன் சுகத்தைப் பெரிதாக எண்ணாமல், இவள் ஆசைகளை நிறைவேற்றி சந்தோஷமாக வாழவைப்பான். ஆனால், இவள் அவன்மீது பெரிதாக பாசம் வைக்கமாட்டாள். இதற்கும் ஒரு காரணம் உண்டு.
முற்பிறவியில் இவள் கணவன், தன் தாய்- தந்தை, தன் சகோதரிகளின் பேச்சைக் கேட்டும், தன் விருப்பம்போல் வேறு பெண்களுடன் சுகம் அனுபவித்தும், இவளை சரியாக கவனியாமல் கஷ்டப்படச் செய்து வாழ்ந்தான். இதனால், இவள் தன் முற்பிறவியில் கணவனுடன் சுகமாக முழுமை யான நாட்கள் வாழமுடியவில்லை. முற்பிறவி யில் கணவன் தான் கட்டிய மனைவிக்குச் செய்த பாவத்தை, தராத சுகத்தை இப்பிறவியில் இவளை மணம் முடித்து, சுகமாக வாழச்செய்து, அந்த பாவத்தை தக்கமுறையில் நிவர்த்திசெய்து முடிப்பான்.
இதுபோன்று முற்பிறவிக் கணவனை மணந்து வாழப் பிறந்துள்ள, பெண்களுக்கு, அவள் முற்பிறவிக் கணவனையறிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும். பெற் றோர்கள் தங்கள் விருப்பம்போல் நிர்பந்தப் படுத்தி எவரையோ திருமணம் செய்து வைத்தால், சிறிது காலம் வாழ்ந்து, பின் அவள் முற்பிறவிக் கணவனை சந்தித்து அவனுடன் சேர்ந்து வாழ்வாள்.
இன்றைய இளம் ஜோதிடர்கள் நிறைய ஜாதகங்களை ஆய்வு செய்யுங்கள். இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளையும், குடும்ப உறவுகளையும், கிரகங்களாகப் பார்த்து வாழ்வின் பலன்களை ஆய்வு செய்யுங் கள். ஒவ்வொருவரின் வினைப்பதிவையும் உங்களால் துல்லியமாக அறிந்துகொண்டு பலன் கூறமுடியும். ஜோதிடம் ஒரு அறிவியல்.
பெண்களின் திருமணம் சம்பந்தமான இன்னும் சில விவரங்களை அடுத்த இதழில் அறிவோம்.
செல்: 99441 13267